தொட்டியம் அரசு பஸ் டிரைவருக்கு மத்திய அரசு விருது


தொட்டியம் அரசு பஸ் டிரைவருக்கு மத்திய அரசு விருது
x

தொட்டியம் அரசு பஸ் டிரைவருக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டது.

திருச்சி

தொட்டியம் பவளக்கடை வீதியை சேர்ந்தவர் சி.ரவிச்சந்திரன் (வயது 58). டிரைவரான இவர் முசிறி அரசு போக்குவரத்து பணிமனையில் கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் 27 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் வாகனத்தை ஓட்டியதால் மத்திய அரசு விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார். புதுடெல்லியில் நடந்த விழாவில் இதற்கான விருதை மத்திய போக்குவரத்து துறை மந்திரி விகாங்சிங் வழங்கினார். விருது பெற்ற ரவிச்சந்திரனை சக ஊழியர்கள் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினர்.


Next Story