மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு


மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு
x

கிருஷ்ணராயபுரம் பகுதியில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மணவாசி, கம்பநல்லூா், மகாதானபுரம், சிந்தலவாடி, பிள்ளபாளையம், போத்துராவுத்துன்பட்டி ஆகிய பகுதிகளில் தூர்வாரப்பட்ட வாய்க்கால்களை மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்ட மத்திய துணை செயலாளர் பிரதீப், தொழில்நுட்ப அலுவலர் (நீர் மேலாண்மை) ஜோதி பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், பல வகையான செடிகள், நாற்றங்கால் விடப்பட்டுள்ள இடத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது திட்ட அலுவலர் மந்திராச்சலம், கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story