மத்திய அரசு பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை


மத்திய அரசு பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
x

இறக்குமதியை தவிர்க்க மத்திய அரசு பருப்பு வகைகளில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

விருதுநகர்

இறக்குமதியை தவிர்க்க மத்திய அரசு பருப்பு வகைகளில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாயத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பருப்பு உற்பத்தி

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

கடந்த 2017- 2018-ம் ஆண்டிலிருந்து 2022-2023-ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் பருப்பு வகைகளின் இறக்குமதி 60 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் உற்பத்தி 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

இதனால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்வது என்பது தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய அரசின் விவசாயத்துறை அடுத்த 3 ஆண்டுகளில் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இறக்குமதி தவிர்ப்பு

அந்த வகையில் நடப்பாண்டில் 49.5 லட்சம் டன் துவரை, 23.88 லட்சம் டன் உளுந்து, 16.95 லட்சம் டன் மசூர் பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் 2025-2026-க்குள் தன்னிறைவு பெற்று பருப்பு இறக்குமதியை முற்றிலும் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பருப்புவகைகளின் உற்பத்தியை அதிகரிக்க தரமான விதைகளை விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story