மத்திய அரசின் முயற்சியைதடுத்து நிறுத்த வேண்டும்


மத்திய அரசின் முயற்சியைதடுத்து நிறுத்த வேண்டும்
x

மருந்துகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநிலஅரசு உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர்

மன்னார்குடி:

மருந்துகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநிலஅரசு உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வணிகர் சங்கம்

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க செயலாளர் சீனிவாசா ராமச்சந்திரன் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தற்போது மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநில அரசு உரிமம் வழங்கி வருகிறது.

உதாரணமாக ஒரு மருந்து உற்பத்தி நிறுவனமானது மருந்துகளின் திறனை (பவர்) வெவ்வேறு வடிவங்களில் வெளியிட முற்படும்போது, இந்த உரிமத்தை மாநில அரசே வழங்கி வருகிறது.

இந்த நிலையில் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிய மருந்துகள் மற்றும் அழகுசாதன மருத்துவ உபகரணங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் மருந்துகளுக்கான உரிமம் வழங்கும் மாநில அரசின் உரிமையை ரத்து செய்து, மத்திய அரசு இதற்கான உரிமங்களை வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

இதனால் ஒவ்வொரு முறையும் மருந்து நிறுவனங்கள் டெல்லிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மாநில அளவில் நல்ல முறையில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நடைமுறையை ரத்து செய்வது மாநில சுயாட்சி தத்துவத்துக்கு எதிராக அமையும்.

எனவே தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசின் இத்தகைய முயற்சியை தடுத்து நிறுத்தி மருந்துகள் உரிமம் வழங்கும் நடைமுறையை தற்போதைய நிலையிலேயே தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story