காட்பாடி ரெயில் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் குவிந்ததால் பரபரப்பு


காட்பாடி ரெயில் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் குவிந்ததால் பரபரப்பு
x

காட்பாடி ரெயில் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

காட்பாடி ரெயில் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு காட்பாடி ரெயில் நிலையத்தில் இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கமாண்டர்கள் கூறுகையில், மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக பெங்களூருவில் பணிபுரியும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் சென்றனர். அங்கு தேர்தல் பணி முடிந்த பிறகு மீண்டும் பெங்களூரு வர தொடங்கியுள்ளனர். நாங்கள் மேற்கு வங்காளத்தில் இருந்து நேரடியாக காட்பாடி வந்துள்ளோம். இங்கிருந்து போலீஸ் வாகனங்கள் மூலம் பெங்களூருக்கும், சென்னை ஆவடிக்கும் செல்கிறோம் என்றனர்.


Next Story