மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர்-கோவை சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் தனபால் கண்டன உரையாற்றினார். கோட்ட செயலாளர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றல் உத்தரவை உடனடியாக வழங்கிட வேண்டும். தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கிட வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கிட வேண்டும். கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பணிமாற்றம் செய்திட வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கிளாஸ் 1 மற்றும் 2 அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு தொழிலாளர்களுக்கு வழங்குவது போல 4 ஆண்டுகள் என இருந்ததை 10 ஆண்டுகள் என மாற்றியுள்ளதை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story