திருச்சி சரக போலீஸ் அதிகாரிகளுடன் மத்திய மண்டல ஐ.ஜி. ஆலோசனை
திருச்சி சரக போலீஸ் அதிகாரிகளுடன் மத்திய மண்டல ஐ.ஜி. ஆலோசனை நடத்தினார்.
திருச்சி
திருச்சி சரக போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் முன்னிலை வகித்தார். திருச்சி சரகத்துக்கு உட்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு குறித்தும், குற்றங்களை தடுப்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஐ.ஜி. ஆலோசனை மேற்கொண்டார்.
Related Tags :
Next Story