ராகவேந்திர சாமி ஆராதனை விழா
தர்மபுரி புத்திகே மடத்தில் ராகவேந்திர சாமி ஆராதனை விழா நடந்தது.
தர்மபுரி விருபாட்சிபுரம் ஸ்ரீ புத்திகே மட கிளையில் ராகவேந்திர சாமி 351-வது ஆராதனை மகோத்சவ விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கோபூஜை, சத்யநாராயண பூஜை, சாமிக்கு பூர்வ ஆராதனை வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராகவேந்திர சாமி ஆராதனை விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு மத்ய ஆராதனை வழிபாடு, சிறப்பு அபிஷேகம், பல்லக்கு உற்சவம், வெள்ளி ரத உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து 50 தம்பதியினர் கலந்து கொண்டு கனக பூஜை செய்து வழிபாடு நடத்தினர். அப்போது 1,008 ராகவேந்திர சாமியின் நாமாவளிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சாமிக்கு உத்ர ஆராதனை மற்றும் கணபதி ஹோமம், ஞானவேந்திர தீர்த்தர் ஆராதனை நடந்தது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் புத்திகே மட கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.