தேவகோட்டை ஆக்ஸ்வர்ட் மழலையர், தொடக்கப்பள்ளி ஆண்டு விழா


தேவகோட்டை ஆக்ஸ்வர்ட் மழலையர், தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை ஆக்ஸ்வர்ட் மழலையர், தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை ராம்நகர் ஆக்ஸ்வர்ட் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 28-ம் ஆண்டு விழா ராம் நகர் எஸ்.எம்.ஜி.மகாலில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் விஜயன் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார்.சென்னை சி.டி.எஸ். கணினி நிறுவன அசோசியேட் டைரக்டர் பிரசன்னா வாழ்த்தி பேசி பரிசுகள் வழங்கினர். நகர்மன்ற உறுப்பினர் அய்யப்பன் கலந்து கொண்டார்.

தலைமை ஆசிரியர் அமுதா ராணி வரவேற்றார். ஆசிரியை மணிமேகலை ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் சிலம்பம், கராத்தே மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


Next Story