லளிகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
தர்மபுரி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே லளிகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கியில் 11 மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 93 மகளிருக்கு, ரூ.30.22 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, வங்கி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வங்கி தலைவர் அங்குராஜ் தலைமை தாங்கி, மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 93 பேருக்கு, ரூ.30.22 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கினார். இதில் வங்கி செயலர் பிரபாகரன், உதவி செயலர் குமரேசன் உள்ளிட்ட வங்கி பணியாளர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
Next Story