சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்
சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் நகராட்சியில் என்குப்பை என்பொறுப்பு தூய்மை பணியில் நகராட்சியோடு இணைந்து பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் மங்களநாயகி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் ஹேமலதா வரவேற்றார். இதில் நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹீம் மற்றும் நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக சிறப்பாக பணியாற்றிய தூய்ைம பணியாளர்களுக்கு வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டனர். முடிவில் அலுவலக எழுத்தர் வீரபத்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story