போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்; கலெக்டர் அரவிந்த் வழங்கினார்


போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்; கலெக்டர் அரவிந்த் வழங்கினார்
x

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் சான்றிதழ் வழங்கினார்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் சான்றிதழ் வழங்கினார்.

சான்றிதழ்

குமரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கிடையே மாவட்ட அளவில் போதை பொருள் தடுப்பு குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் அரவிந்த் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், அதங்கோட்டாசான் முத்தமிழ் கழக மறுவாழ்வு மைய இயக்குனர் அருள்ஜோதி, நியூ பாரத் டிரஸ்ட் இயக்குனர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story