போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
கூடலூர் ஓவேலியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நீலகிரி
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பெரியசூண்டி பகுதியில் சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலும் ஒழித்து துணியாலான மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள், பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பேரூராட்சி பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story