ஓவிய போட்டியில் வெற்றி ெபற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்


ஓவிய போட்டியில் வெற்றி ெபற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
x

ஓவிய போட்டியில் வெற்றி ெபற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் கிராமத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டது. திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி முன்னிலையில் நடந்த போட்டியில் கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். இதில் ெவற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், தேர்தல் துணை தாசில்தார் நிர்மலா, கல்லூரி முதல்வர் பூங்கேதை, வருவாய் ஆய்வாளர் கவுரி, அக்ராகரம் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story