பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்னகப்பட்டது.
வாணியம்பாடி
பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்னகப்பட்டது.
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி வரவேற்றார்.
பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 166 சுகாதார துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கி பாராட்டி பேசினார்..
திருப்பத்தூர் இணை இயக்குனர் மாரிமுத்து, சப்- கலெக்டர் பிரமேலதா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி, சத்யா, கல்லூரி அறக்கட்டளை தலைவர் விமல்சந்த், அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.