தனித்தேர்வர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்


தனித்தேர்வர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்
x

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தனித்தேர்வர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கடந்த 2014, 2015, 2016, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் தனித்தேர்வர்களாக 12-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வுமையங்களுக்கு சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத (உரிமைகோரப்படாத) தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்கும் பொருட்டு அரசிதழில் அறிவிப்பு வெளிவிட அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே 2014, 2015, 2016, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் தேர்வு எழுதி தேர்வு மையங்களுக்கு சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்கள் உரிய ஆதாரங்களுடன் சென்று ஒரு மாதத்துக்குள் திருவாருர் அரசு தேர்வுகள்உதவி இயக்குனர் அலுவலகத்தில் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் நேரில் சென்று சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story