தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி


தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
x

தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

இலுப்பூரில் கடந்த மே மாதம் 22-ந்தேதி முதல் ஜூன் 5-ந்தேதி வரை கோடைகால தற்காப்பு கலை பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் சதீஷ்குமார் மணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் மணிமொழி, மாவட்ட கல்வி ஆய்வாளர் வேலுச்சாமி, இந்தியன் வங்கி மேலாளர் தீபக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். இதில் துணை பயிற்சியாளர்கள் மற்றும் புதுக்கோட்டை, கரூர், விருதுநகர், திருச்சி, வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story