மேல்விஷாரம் நகரசபை கூட்டம்
மேல்விஷாரம் நகரசபை கூட்டம் நடந்தது.
மேல்விஷாரம் நகரசபை கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகரசபை தலைவர் எஸ்.டி.முகமதுஅமீன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குல்ஜார் அஹமது, ஆணையாளர் பிரீத்தி, பொறியாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
ஜபர்:- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பாழடைந்துள்ளது. அதனை சீர்செய்ய வேண்டும். நகரசபை கூட்ட அரங்கை புதுப்பிக்க வேண்டும்.
ஆணையாளர்:- செலவினம் குறித்து அறிக்கை அனுப்பியுள்ளோம் நிதி வந்தவுடன் சீர் செய்யப்படும்.
ஜியாவுதீன்:- தெருவிளக்குகள் எரிவதில்லை.
தலைவர்:- எல்.இ.டி.லைட் அமைக்க உள்ளோம். நிதி வந்தவுடன் உடனடியாக செய்யப்படும்.
ஹாஜிரா தபசும்:- கழிவுநீர் கால்வாய் பழுதடைந்து உள்ளது.
தலைவர்:- நடவடிக்கை எடுக்கப்படும்.
உஷா:- என்னுடைய வார்டில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை.
தலைவர்:- ஏற்கனவே இருந்த நகராட்சியில் தெருவிளக்கு சம்பந்தமான அலுவலகம் செயல்படுகிறது. அதனை புதிதாக கட்டப்பட்ட நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கு என தனி அறை ஒதுக்கப்படும். பின்னர் தனியாக பதிவேடு வைத்து பராமரிக்கப்படும்.
ஜெயந்தி:- என்னுடைய வார்டில் சிமெண்டு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். குப்பைகளை சரியாக அகற்றுவதில்லை..
தலைவர்:- சரியாக வேலை செய்யாத நகராட்சி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜமுனாராணி:- என்னுடைய வார்டில் சமுதாயக்கூடம் பழுதடைந்துள்ளது.
தலைவர்:- இதுகுறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் கட்டித் தரப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.