பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
x

பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

திருப்பூர்

குண்டடம்

குண்டடத்தை அடுத்துள்ள சின்னாரிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி விவசாயி. இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 65). இவர் நேற்று முன்தினம் மாலை உப்பாறு அணை குண்டடம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி மயிலாத்தாளிடம் வழி கேட்பது போல கேட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளிலிருந்த ஒருவன் திடீரென மயிலாத்தாள் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தான். அவர் சுதாரிப்பதற்குள் 3 பேரும் மோட்டார்சைக்கிளை இயக்கி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றிய புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கொண்டு நகை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.




Next Story