சக்கத்தா மாரியம்மன் கோவில் தேரோட்டம்


சக்கத்தா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சக்கத்தா மாரியம்மன் கோவில் தேரோட்டம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி சக்கத்தா கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் அம்மன் அழைப்பு நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மன் ஊர்வல புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருந்து சக்கத்தா கிராமத்தில் இருந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, அரவேனு பஜார் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கோவிலை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தின்போது பக்தர்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தவாறு சென்றது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இன்று(வியாழக்கிழமை) மதியம் 2 மணிக்கு சிங்க வாகன ஆரோகனம், மஞ்சள் நீர் உற்சவம் மற்றும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கவுண்டிகை தலைமையில் கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story