சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா


சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா
x

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா

தஞ்சாவூர்

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சக்கரவாகேஸ்வரர் கோவில்

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணை கோவிலும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில். இக்கோவில் சப்தஸ்தான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பொம்மை பூபோடும் நிகழ்ச்சி

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை), சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி 8-ந்தேதியும் (சனிக்கிழமை) நடக்கிறது.


Related Tags :
Next Story