சிக்கல் செல்லமுத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சிக்கல் செல்லமுத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சி மேலவீதியில் செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மன் பிரகார புறப்பாடு நடைபெற்றது.
கடந்த 2-ந்தேதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக தேர் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து இரவு செடில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள், விழா குழுவினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story