வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
கபிஸ்தலத்தில் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் பாலக்கரை வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் நாகராஜன் தலைமையில் நடந்தது. செயலாளர் கலியமூர்த்தி வரவேற்று பேசினார். துணைத் தலைவர் சுதாகர், நிர்வாகிகள் கோவிந்தராசு, கணேசன், சந்திரசேகரன், தியாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை தஞ்சை மண்டல தலைவர் செந்தில்நாதன், மாவட்ட பொருளாளர் பாஸ்கர், பாபநாசம் தொகுதி செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டு அரசு பொதுதேர்வில் இந்த பகுதியில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். கூட்டத்தில் வணிக நல வாரியத்தில் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து பயனடைய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கபிஸ்தலம் ஊராட்சி தலைவர் சுமதிகுணசேகரன், மேல கபிஸ்தலம் வணிகர் சங்க தலைவர் சுந்தர்ராஜன், வணிகர் சங்க நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் வணிகர் சங்க பொருளாளர் பஷீர் நன்றி கூறினார்.