தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
x

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி , திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story