தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், கோவை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story