கோவை, நெல்லை உள்பட 14 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை,
காற்றின் திசை மாறுபாடு காரணமாக கோவை, நெல்லை உள்பட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை) கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வியாழக்கிழமை முதல் வெப்பம் படிப்படியாக குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்" என்று தெரிவித்துள்ளது.