தமிழகத்தில் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மேதுவாக நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைகால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வரும் 22-ம் தேதிகளில் தமிழக கடலோ மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவள்ளூர்,நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் வரும் 23-ம் தேதி கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.