சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெப்பம் மக்கள் வாட்டி வதைக்கிறது. வெப்பத்தை சமாளிக்க மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும், இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகரித்து கானப்படுகிறது. எனினும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story