நாளை முதல் 11-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
நாளை முதல் 11-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (புதன்கிழமை) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதற்கடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது புயல் சின்னமாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதுபற்றி இன்றோ அல்லது நாளையோ ஆய்வு மையத்தால் கணிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக, நாளை முதல் வருகிற 11-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரியின் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story