தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவு இடி மின்னலுடன் நள்ளிரவை தாண்டியும் கனமழை பெய்தது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் லேசான தூறல் விழுந்த படி அதிகாலை முதல் கால நிலை காணப்படுகிறது.
கனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படவில்லை. இருப்பினும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தஞ்சை, கரூர் மற்றும் நாகையில் லேசான- மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.