அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x

சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது

சென்னை,

தமிழகத்தில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது 3-ந்தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை , திருவள்ளூர் , ராணிப்பேட்டை , வேலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவாரூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் , தஞ்சாவூர், அரியலூர், கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story