அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்!


அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்!
x
தினத்தந்தி 9 April 2023 12:54 PM IST (Updated: 9 April 2023 1:03 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் வெப்பநிலை அடுத்த 4 நாட்களுக்கு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்று புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.


Next Story