தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
x
தினத்தந்தி 24 April 2023 7:42 AM IST (Updated: 24 April 2023 7:43 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருத்தணியில் 3 செ.மீ, திருவாலங்காடு, பள்ளிபட்டு, செங்குன்றம், சோழவரத்தில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


Next Story