தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x

தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் 30-ந்தேதி (சனிக்கிழமை) வரை தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், சேலம், திருச்சி, நெல்லை, சிவகங்கை, பெரம்பலூர், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story