சந்தன மாரியம்மன் கோவில் கொடைவிழா


சந்தன மாரியம்மன் கோவில் கொடைவிழா
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கி.வ.ஆழ்வார்தோப்பு கட்டையம்புதூர் சந்தன மாரியம்மன் கோவில் கொடைவிழா நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கி.வ.ஆழ்வார் தோப்பு கட்டையம்புதூர் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மே.1-ந் தேதி காலை 5.30 மணிக்கு மங்கல இசைநிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு வருசாபிஷேகம், காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகமும், தொடர்ந்து மதியம்1 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6.30 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு குடி அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மதியக்கொடை நிகழ்ச்சியில் சாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் கும்பம் எடுத்து வரப்பட்டது. இரவு 8 மணிக்கு அலங்கார பூஜையும், கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது. நேற்று காலையில் கிடா வெட்டும் நிகழ்ச்சியும், காலை 10.30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story