சந்திரயான்-3 பயணத்தின் தொடக்கம் வெற்றி - ராமதாஸ் வாழ்த்து


சந்திரயான்-3 பயணத்தின் தொடக்கம் வெற்றி - ராமதாஸ் வாழ்த்து
x

சந்திரயான்-3 விண்கலம் நிலவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

சந்திரயான் 3 விண்கலம் நிலவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நிலவை ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திட்டமிட்டவாறு ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரத்தில் நிலவில் இறங்கி சாதனை படைக்க வாழ்த்துகள். இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறது.

இந்த சாதனைக்கு காரணமான இஸ்ரோ அறிவியலாளர்கள், பிற பணியாளர்கள் அனைவருக்கும், குறிப்பாக, சந்திரயான் 3 திட்ட இயக்குனரான எங்கள் மாவட்டத்து மைந்தர் வீரமுத்துவேலுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Next Story