சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரெயில் போக்குவரத்தில் நாளை மாற்றம்


சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரெயில் போக்குவரத்தில் நாளை மாற்றம்
x

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்

சென்னை,

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நாளை (12-ந்தேதி) காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.25 மணி, 10 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரெயில்கள் சிங்கபெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

மறு மார்க்கமாக நாளை காலை 11.20 மணி, பிற்பகல் 12 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கபெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story