மதுரை-விழுப்புரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மதுரை-விழுப்புரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

மதுரை-விழுப்புரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை-விழுப்புரம்(வண்டி எண்: 16868) இடையே காலை 4.05 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மற்றும் 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மதுரை-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திண்டுக்கலில் இருந்து 5.05 மணிக்கு இயக்கப்படும்.

ராமேஸ்வரம்-மதுரை(06652) இடையே காலை 5.40 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மற்றும் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை(ஞாயிற்றுகிழமைகள் தவிர்த்து) ராமேஸ்வரத்தில் இருந்து 2.30 மணி நேரம் தாமதமாக காலை 8.10 மணிக்கு புறப்பட்டு மதுரை நோக்கி இயக்கப்படும்.

மதுரை-ராமேஸ்வரம்(06653) இடையே மதியம் 12.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரமாற்றம் செய்யப்பட்டு வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மற்றும் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை(ஞாயிற்றுகிழமைகள் தவிர்த்து) மதுரையில் இருந்து 50 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story