வேலூரில் இருந்து அரசு, தனியார் பஸ்கள் புறப்படும் இடம் மாற்றம்


வேலூரில் இருந்து அரசு, தனியார் பஸ்கள் புறப்படும் இடம் மாற்றம்
x

வேலூரில் இருந்து அரசு, தனியார் பஸ்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர்

வேலூர் புதிய பஸ் நிலையம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.46 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், தாம்பரம், ராணிப்பேட்டை, திருத்தணி உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இங்கிருந்து இயக்கப்பட்ட பஸ்கள் 9-ந் தேதி காலை முதல் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், தாம்பரம், திருத்தணி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் வேலூர் மக்கான் பகுதியில் உள்ள ஆடுதொட்டி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். ஆடுதொட்டி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட திருவண்ணாமலை, சித்தூருக்கு செல்லும் பஸ்கள் இனி வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்து உள்ளார்.


Next Story