தம்பதி கொலையில் தேடப்பட்டவர் வேலூர் கோர்ட்டில் சரண்


தம்பதி கொலையில் தேடப்பட்டவர் வேலூர் கோர்ட்டில் சரண்
x

அரக்கோணம் அருகே நடந்த தம்பதி கொலையில் தேடப்பட்டவர் வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

காஞ்சீபுரத்தை அடுத்த புஞ்சை அரசந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52), இவரது மனைவி ராணி (47). இவர்கள் இருவரும் கடந்த மாதம் சாலை கிராமம் ஏரி பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தரணி மற்றும் திருத்தணி கூலிப்படையை சேர்ந்த சுனில், சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை (31) என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் வேலூர் கோர்ட்டில் சுப்பிரமணி சரணடைந்தார். அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story