புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்று கொண்டார்.
நாமக்கல்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ராஜாரணவீரன் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டாக (பயிற்சி) பணி புரிந்து வந்த கலையரசன் பரமத்திவேலூருக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று கொண்டார். அவரை வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போக்குவரத்து போலீசார், அனைத்து மகளிர் போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story