ஆட்டோக்களில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல்
மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்ததை விட கிரிவலம் சென்ற பக்தர்களிடம் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்ததை விட கிரிவலம் சென்ற பக்தர்களிடம் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
அடிப்படை வசதிகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 6-ந் தேதி மாலை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நேற்று காலையில் பவுர்ணமி தொடங்கி இன்று காலையில் நிறைவடைந்தது.
மகா தீபம் மற்றும் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்வது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2 மாதங்களாக பல கூட்டங்கள் நடத்தப்பட்டு திட்டமிடப்பட்டது.
இதில் ஒரு பகுதியாக ஆட்டோ டிரைவர்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து தீப தரிசன நாளில் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்தது.
கூடுதல் கட்டணம்
தற்காலிக பஸ் நிறுத்தத்தில் இருந்து மற்றொரு பஸ் நிறுத்தத்திற்கு செல்ல குறைந்தபட்சமாக ரூ.30-ம், அதிகபட்சமாக ரூ.50 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ஆட்டோ கட்டணத்தை வசூலிக்காமல் பல மடங்கு கூடுதல் கட்டணத்தை வசூலித்ததாக பக்தர்கள் பலர் குற்றச்சாட்டு எழுப்பினர்.
எனவே வரும் பவுர்ணமி நாட்களில் இதுபோன்று இல்லாமல் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் அவதி அடையும் அளவிற்கு இல்லாத வகைக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.