பிளேக் மாரியம்மன் கோவில் தேரோட்டம்


பிளேக் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

சூளகிரி அருகே பிளேக் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே சப்படி கிராமத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story