பெரியபெருமாள் கோவில் தேரோட்டம்


பெரியபெருமாள் கோவில் தேரோட்டம்
x

பெரியபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள பெரிய பெருமாள் கோவிலில் கடந்த 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் பெரிய பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு பெரிய பெருமாள் கோவிலில் இருந்து கிளம்பி மாட வீதிகள் வழியாக செப்பு தேர் நிலையத்தை அடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது கோவிந்தா, கோபாலா, என கோஷமிட்டு நான்கு ரத வீதி வழியாக தேரோட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story