காளையார்கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
காளையார்கோவிலில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காளையார்கோவில்
காளையார்கோவிலில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சொர்ணகாளீஸ்வரர் கோவில்
பொதுவாக சிவாலயங்களில் ஒரே சிவன், அம்பாள் சன்னதிகளை தரிசிக்கலாம். ஆனால் காளையார்கோவிலில் மட்டும் ஒரே கோவிலில் 3 சிவன் கோவில்கள் உள்ளன. சொர்ண காளீஸ்வரர்- சொர்ணவல்லி அம்மன், சோமேஸ்வரர்-சவுந்தரநாயகி, சுந்தரேஸ்வரர்-மீனாட்சி ஆகிய 3 சிவன், 3 அம்பாள் அருட்காட்சி தருகிறார்கள்.
சிறப்பு வாய்ந்த இந்த சொர்ண காளீஸ்வரர் கோவிலில் கடந்த 27-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
தேரோட்டம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சொர்ண காளீஸ்வரர் பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருக்க ஆண்களும், சிறிய தேரில் சொர்ணவள்ளி அம்பாள் வீற்றிருக்க பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் பக்தர்கள் ெவள்ளத்தில் ஆடி அசைந்து வந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் பால சரவணன், ஸ்ரீகாளீஸ்வர குருக்கள், சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விழாவையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.