குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு தேரோட்டம்
குற்றாலம் கோவிலில் நடைபெற்ற சித்திரை விசு திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுந்தனர்.
குற்றாலம் கோவிலில் நடைபெற்ற சித்திரை விசு திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுந்தனர்.
குற்றாலநாத சுவாமி
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை விசு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின் 5-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர், முருகன், நடராஜர், குழல் வாய்மொழி அம்மை ஆகிய நான்கு தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திரளான பக்தர்கள்
தேர்கள் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி மீண்டும் நிலையத்தை அடைந்தது.
இந்த தேரோட்டத்தில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் குற்றாலத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாண்டவ தீபாராதனை
7-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) நடராச மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 12-ந் தேதி சித்திர சபையில் நடராச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.