கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம்


கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோவில்  தேரோட்டம்
x

பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோவில் ேதரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நாகேஸ்வரசாமி கோவில்

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோவில் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும், ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தனது சக்தியை பெற்றார் என்பது புராண வரலாறு.சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம் 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரோட்டம்

விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.

இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


Next Story