பெரியபள்ளிபாளையத்தில் தேர் திருவிழா
பெரியபள்ளிபாளையத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.
திருச்சி
காட்டுப்புத்தூர், ஆக.30-
காட்டுப்புத்தூர் அருகே பெரியபள்ளிபாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மகா மாரியம்மன் உருவ சிலையை தேருக்கு கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்கள்தேரை தூக்கி கொண்டு பெரியபள்ளிபாளையம், சின்னபள்ளிபாளையம் கிராமங்களில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். அப்போது இரு கிராம மக்களும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. தற்போது, மீண்டும் நடைபெற்றதால் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story