குற்றாலநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்


குற்றாலநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

தென்காசி

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் 5-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள்

இதில் விநாயகர் தேர், முருகன் தேர், குற்றாலநாத சுவாமி தேர், குழல்வாய்மொழி அம்மன் தேர் ஆகிய நான்கு தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

தேர்கள் ரத வீதிகளில் சுற்றி மீண்டும் புறப்பட்ட நிலையத்தை அடைந்தன.

தேரோட்ட விழாவில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை இழுத்தனர்.



Next Story