ராமேசுவரம் கோவிலில் இன்று தேரோட்டம்
ஆடி திருக்கல்யாண திருவிழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தேேராட்டம் நடக்கிறது.
ராமேசுவரம்,
ஆடி திருக்கல்யாண திருவிழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தேேராட்டம் நடக்கிறது.
தங்க பல்லக்கில்...
ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 23-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் தினசரி ஒரு வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். நேற்று முன்தினம் இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் 8-வது நாளான நேற்று காலை அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி நடுத்தெருவிலுள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்று இரவு மீண்டும் அங்கிருந்து புறப்படாகி இரவு 9 மணிக்கு கோவிலுக்கு அம்பாள் சென்றடைந்தார்.
தேரோட்டம்
திருவிழாவின் 9-வது நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் அம்பாள் தேரோட்டம் நடைபெறுகின்றது. திருவிழாவில் நாளை மறுநாள்(2-ந்தேதி) அன்று சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் 3-ந் தேதி அன்று இரவு சாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.